2017-08-11 15:13:00

அமெரிக்க ஐக்கிய நாட்டின் மராவி தாக்குதலுக்கு ஆயர்கள்...


ஆக.11,2017. பிலிப்பீன்ஸ் நாட்டின் மிந்தனாவோ தீவில், பயங்கரவாதக் குழுக்களைக் குறிவைத்து அமெரிக்க ஐக்கிய நாடு நடத்த திட்டமிட்டுள்ள வான்வழித் தாக்குதல்களுக்கு, குறைந்தது மூன்று பிலிப்பீன்ஸ் ஆயர்கள் தங்களின் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

பிலிப்பீன்சில், இஸ்லாமிய தீவிரவாத அரசின் இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்த, அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத்திற்கு அனுமதியளிக்க, பென்டகன் (Pentagon) திட்டமிட்டு வருவதாக, NBC ஊடகம் இவ்வாரத்தில் செய்தி வெளியிட்டதையடுத்து, இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் ஆயர்கள்.

மராவி ஆயர் Edwin de la Pena அவர்கள் கூறுகையில், சண்டைகளைத் தீர்ப்பதற்கான பிலிப்பீன்ஸ் நாட்டின் உரையாடல் வழிமுறைகளை அரசு மேற்கொண்டால், மிந்தனாவோவில் நடைபெறும் போருக்கு, எளிதாகத் தீர்வு காண முடியும் என்று கூறினார்.

இதற்கிடையே, இஸ்லாமிய தீவிரவாத அரசோடு தொடர்புடைய பிலிப்பீன்ஸ் பயங்கரவாதக் குழுக்களால் ஆக்ரமிக்கப்பட்ட மராவி நகரில், அக்குழுக்களுக்கு எதிராக, அமெரிக்க ஐக்கிய நாடு, வான்வழித் தாக்குதல்களை நடத்தத் தேவையில்லை என, பிலிப்பீன்ஸ் இராணுவமும், பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் கூறியுள்ளனர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.