2017-08-12 16:10:00

திருத்தந்தையின் முயற்சியால், உக்ரைனில் 80 நலத்திட்டங்கள்


ஆக.12,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பரிந்துரையின்பேரில், உக்ரைன் நாட்டிற்கு ஆற்றப்படும் நிதியுதவிகளால், எண்பது மனிதாபிமானத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு உதவுமாறு, 2016ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதியன்று திருத்தந்தை, ஐரோப்பிய திருஅவையைக் கேட்டுக்கொண்டதன்பேரில், அதே மாதம் 24ம் தேதியன்று, அனைத்து ஐரோப்பிய ஆலயங்களிலும், உக்ரைன் நாட்டிற்காக உண்டியல் எடுக்கப்பட்டது.

இதன் பயனாக, தற்போது உக்ரைன் காரித்தாஸ் நிறுவனம், சிறிய, பெரிய என எண்பது  மனிதாபிமானத் திட்டங்களை நடத்தி வருகின்றது.

600 சிறார், மறுபடியும் பள்ளிகளுக்குச் செல்லவும், 1,410 குடும்பங்களின் மறுவாழ்வுக்கும், சிறார் கோடை விடுமுறை பயிற்சிப் பாசறைகளில் பங்கு கொள்ளவுமென, இந்நிதியுதவி செலவழிக்கப்படுகின்றது என்று, உக்ரைன் காரித்தாஸ் கூறியுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.