2017-08-16 16:56:00

குவாம் நாட்டிற்காக செபிக்க தலத்திருஅவை அழைப்பு


ஆக.16,2017. குவாம் நாட்டைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தான நிலைக்கு, சுமுகமான முறையில் தீர்வு காணப்பட மக்கள் செபிக்க வேண்டுமென்று அந்நாட்டு தலத்திருஅவை விண்ணப்பித்துள்ளது.

வடகொரியாவின் அரசுத்தலைவரும், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவரும் விடுத்துவரும் கடுமையான அறிக்கைகளைத் தொடர்ந்து, அகானா (Agana) உயர்மறைமாவட்ட வாரிசு பேராயர் Michael Byrnes அவர்கள், மக்களிடம் இந்த விண்ணப்பத்தை விடுத்துள்ளார்.

குவாம் இராணுவத் தளங்களில் பணியாற்றும் வீரர்கள், தங்கள் கடமைகளைத் தெளிந்த உள்ளத்துடன் நிறைவேற்றவும், அவர்களுக்கு இறைவன் பாதுகாப்பளிக்கவும் செபிக்குமாறு, பேராயர் Byrnes அவர்கள், கேட்டுக்கொண்டுள்ளார்.

பேராயரின் விண்ணப்பத்தையடுத்து, குவாம் தலைநகரான ஹகத்னா(Hagatna)வில், ஆகஸ்ட் 13, கடந்த ஞாயிறன்று, பாத்திமா அன்னையைச் சிறப்பிக்கும் பவனியும், செபமாலை பக்தி முயற்சியும் மேற்கொள்ளப்பட்டன.

அணு ஆயுத தாக்குதல்கள் நிகழும்போது, மக்கள் மேற்கொள்ளவேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சிகளை, குவாம் நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்கப் பள்ளிகளிலும் உள்ள மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அரசு வழங்கவேண்டும் என்று, அகானா உயர் மறைமாவட்டம் விண்ணப்பித்துள்ளது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.