2017-08-23 15:35:00

அடிமைத்தனத்திற்குப் பலியாகும் அனைவரின் அருகிலும்...


ஆக.23,2017. "மனிதாபிமானமற்ற முறையில் நடைபெறும் தொழில், சட்டத்திற்குப் புறம்பான மனித வர்த்தகம், சுரண்டல் என்ற பல வடிவங்களில், பழங்காலத்திலும் இன்றும் நடைபெறும் அடிமைத்தனத்திற்குப் பலியாகும் அனைவரின் அருகிலும் ஆண்டவர் இருக்கிறார்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இப்புதனன்று இடம்பெற்றன.

அடிமை வர்த்தகத்தை ஒழித்ததன் நினைவாக, ஆகஸ்ட் 23, இப்புதனன்று கடைபிடிக்கப்பட்ட உலக நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி அமைந்திருந்தது.

தற்போது, ஹெயிட்டி மற்றும் தொமினிக்கன் குடியரசு என்றழைக்கப்படும் சாந்தோ தொமிங்கோ என்ற இடத்தில், 1791ம் ஆண்டு, ஆகஸ்ட் 22 இரவிலும், 23ம் தேதியும், அடிமைகள் மேற்கொண்ட அறப்போராட்டத்தின் நினைவாக, ஆகஸ்ட் 23ம் தேதி, அடிமை வர்த்தகத்தின் அழிவை நினைவுகூரும் உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது.

ஐ.நா. அவையின் கல்வி, அறிவியல், கலாச்சாரக் கழகமான யுனேஸ்கோ (UNESCO)வின் முயற்சியால், 1988ம் ஆண்டு முதல், இந்த உலக நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.