2017-08-23 15:48:00

வெனெசுவேலாவில் நிலவும் கொடுமைகள் குறித்து காரித்தாஸ்


ஆக.23,2017. வெனெசுவேலா நாட்டில் நிலவும், கொடிய வறுமை, உணவு மற்றும் மருந்துகளின் தட்டுப்பாடு, பட்டினியால் வாடும் குழந்தைகளின் எண்ணிக்கையில் காணப்படும் ஆபத்தான வளர்ச்சி ஆகியவை குறித்து, அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பு தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

நாட்டிலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில், 54 விழுக்காட்டினர், போதிய உணவின்றி வாடுவதையும், கடந்த சில மாதங்களாக, நீரழிவு நோயுற்றோரின் எண்ணிக்கை 95 விழுக்காடு கூடியிருப்பதையும், காரித்தாஸ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் HIV அல்லது AIDS நோயுள்ள 1,14,000 பேருக்கு, மருத்துவ உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை என்றும், காரித்தாஸ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஒவ்வொரு நாளும், 60,000த்திற்கும் அதிகமான மக்கள் வெனெசுவேலா நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என்றும், பிரேசில், சிலே, பெரு ஆகிய நாடுகள் இவர்களுக்குப் புகலிடம் தருகின்றன என்றும் ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அமைப்பு, புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.