2017-08-26 14:28:00

மழையால் பாதிக்கப்பட்டோரிடையே மறுவாழ்வுப் பணி


ஆக.,26,2017. பங்களாதேசில் இடம்பெற்றுவரும் பெருமழையாலும் வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொருளுதவிகளை வழங்கிவருகிறது பங்களாதேஷ் காரித்தாஸ் அமைப்பு.

பங்களாதேசின் 64 மாவட்டங்களுள் 32 மாவட்டங்கள் வெகு அளவில் பாதிக்கப்பட்டு, ஏறத்தாழ எட்டு இலட்சம் மக்கள் தங்கள் குடியிருப்புக்களை இழந்துள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறது, கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.

Dinajpur மறைமாவட்டத்தில் உள்ள ஏறத்தாழ 4000 பேருக்கு உதவிகளை வழங்கியுள்ள காரித்தாஸ் அமைப்பு, Rajshahi மறைமாவட்டத்தின் 1550 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் சமையல் எண்ணையை வழங்கத் துவங்கியுள்ளது.

பங்களாதேசில் உள்ள எட்டு மறைமாவட்டங்கள் வழியாக தன் பணிகளை ஆற்றி வரும் காரித்தாஸ் அமைப்பு, வெள்ளப் பெருக்கால் நாடு தாக்கப்பட்டவுடனேயே தன் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 3,927 பேருக்கு, ஒவ்வொரு நாளும் இருவேளை உணவு வழங்கி வருகிறது, பங்களாதேஷ் காரித்தாஸ் அமைப்பு.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.