சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

ஹார்வி புயலால் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தையின் செய்தி

ஹார்வி புயலால் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணி - EPA

31/08/2017 15:59

ஆக.31,2017. அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஹார்வி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களையும் செப உறுதியையும் வழங்கி, செய்தி ஒன்றை அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் டேனியல் டிநார்டோ அவர்களுக்கு திருத்தந்தையின் பெயரால் அனுப்பப்பட்டுள்ள இச்செய்தி, டெக்ஸாஸ் மற்றும் லூயிசியானா மாநிலங்களில் இடம்பெற்ற பெரும்புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தையின் ஆன்மீக அருகாமையையும், மேய்ப்புப்பணி அக்கறையையும் தெரிவிக்குமாறு விண்ணப்பிக்கிறது.

உயிரிழப்புக்களையும் பொருள்சேதங்களையும் உருவாக்கியுள்ள இந்தப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், இவர்களிடையே பணிபுரியும் நல்மனம் கொண்டோருக்காகவும், திருத்தந்தை செபிப்பதாகக் கூறும் இச்செய்தி, ஒருமைப்பாட்டையும் ஒருவருக்கொருவர் உதவுதையும் தங்கள் பாரம்பரியமாக கொண்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டில், தனியார்களும் சமூகங்களும் தங்களுக்குள் தொடர்ந்து உதவுவார்கள் என்ற நம்பிக்கையையும், எடுத்துரைக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

31/08/2017 15:59