சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ இந்தியா, இலங்கை

சீரோ மலபார் திருஅவையில் மூன்று புதிய ஆயர்கள்

சீரோ மலபார் ஆயர்கள் மாமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூன்று புதிய ஆயர்கள் - RV

01/09/2017 16:23

செப்.01,2017. இந்தியாவின் சீரோ மலபார் ஆயர்கள் மாமன்றம், திருத்தந்தையின் ஒப்புதலோடு, மூன்று ஆயர்களை, இவ்வெள்ளியன்று நியமித்துள்ளது.

திருச்சூர் உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராக, அருள்பணி டோனி நீலன்காவில் அவர்களையும், தெல்லிச்சேரி உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராக, அருள்பணி ஜோசப் பிம்பிளானி அவர்களையும், சீரோ மலபார் தலைமையகத்தில் பணியாற்றும் ஆயராக, அருள்பணி செபாஸ்டின் வனியபுரக்கல் அவர்களையும் இம்மாமன்றம் நியமித்துள்ளது.

50 வயது நிறைந்த டோனி நீலங்காவில் அவர்கள், இறையியலிலும், 48 வயது நிறைந்த ஜோசப் பிம்பிளானி அவர்கள், விவிலியத்திலும், 50 வயது நிறைந்த செபாஸ்டின் வனியபுரக்கல் அவர்கள், திருஅவைச் சட்டங்களிலும் முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

01/09/2017 16:23