2017-09-04 16:22:00

துன்பங்களை கொடையாகவும், சோர்வை மகிழ்வாகவும் காண உதவுதல்


செப்.04,2017. இயேசுவின் நற்செய்தியை மகிழ்வுடனும், விசுவாசத்துடனும், திறந்த மனதுடனும், கீழ்ப்படிதலுடனும் அறிவிக்கும் வழிகளில் இறைவன் உதவுகிறார் என  Neocatechumenal Way  என்ற அமைப்புக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1964ம் ஆண்டு இஸ்பெயின் நாட்டின் மத்ரிதித்தில் Kiko Argüello, மற்றும், Carmen Hernández ஆகியோரால், கிறிஸ்தவ உருவாக்கலுக்கு உதவும் பயிற்சிமுறைகளுக்கென நிறுவப்பட்ட Neocatechumenal Way என்ற அமைப்பிற்கு நன்றி தெரிவித்து திருத்தந்தை அனுப்பியுள்ள கடிதம், தனக்கு அனுப்பப்பட்ட Carmen Hernández அவர்களின் வாழ்வு குறிப்பேடு குறித்தும் எடுத்துரைக்கிறது.

கடந்த ஆண்டு இறையடி சேர்ந்த Carmen Hernández அவர்களின் தினசரி குறிப்புகள் என்ற நூல், ஜூலையில் வெளியிடப்பட்டு, தனக்கும் ஒரு பிரதி அனுப்பப்பட்டது குறித்து, தன் நன்றியை வெளியிட்டு Kiko Argüello அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1979ம் ஆண்டிற்கும் 81ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தின் நாள்குறிப்புக்களைக்கொண்டு எழுதப்பட்ட இந்த நூல், துன்பங்களை கொடையாகவும், சோர்வை மகிழ்வாகவும் காணும் வழிகளைக் கற்றுத்தருகிறது என அதில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.