2017-09-07 16:12:00

DACA திட்டத்தை ஆதரிப்பது, இயேசுசபையினரின் சாட்சியம்


செப்.07,2017. அமெரிக்க ஐக்கிய நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் இளையோரைக் காப்பதற்கென, 2012ம் ஆண்டு உருவாக்கப்பட்ட DACA திட்டத்திற்கு முழு ஆதரவளித்து, அமெரிக்க ஐக்கிய நாட்டில் இயங்கிவரும் இயேசு சபை கல்விக்கூடங்களைச் சேர்ந்த 1400க்கும் அதிகமான கல்வியாளர்கள், டிரம்ப் அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

DACA திட்டத்தின் கீழ் தங்கள் கல்வி மனைகளில் பயின்று வரும் இளையோர், கடினமாக உழைப்பவர்கள் என்றும், பல்வேறு தடைகளைத் தாண்டி அவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்ற எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் தங்களுக்கு பெரும் உந்து சக்தியாக அமைந்துள்ளன என்றும், இயேசு சபை கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

எப்பாடு பட்டாகிலும் DACA திட்டத்திற்கு முழு ஆதரவு தருவதைக்காட்டிலும் சிறந்ததொரு சாட்சியம் இருக்கமுடியாது என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு இயேசுசபையினரின் தலைவர், அருள்பணி Timothy Kesicki அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

DACA திட்டத்தில் இணைந்துள்ள இளையோர், குழந்தைகளாக இருக்கும்போதே இந்நாட்டிற்கு வந்துவிட்டதால், அவர்களுக்குத் தெரிந்த ஒரே நாடு, அமெரிக்க ஐக்கிய நாடு மட்டுமே என்பதை, தற்போதைய அரசு மறந்துவிடக்கூடாது என்று, ஆஸ்டின் ஆயர், Joe Vásquez அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : jesuits.org / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.