2017-09-13 16:26:00

திருவழிபாட்டு நூல்கள் மொழிபெயர்ப்பு பற்றிய புதிய ஏடு


செப்.13,2017. திருவழிபாட்டு நூல்களின் மொழிபெயர்ப்பை அங்கீகரிப்பதில் தேசிய ஆயர்கள் பேரவைகளுக்கு முதன்மைப் பங்கை அளிப்பதற்கு, திருஅவை சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 8ம் தேதி, திருத்தந்தையின் சுய விருப்பத்தின்பேரில் (motu proprio), Magnum Principium என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஏட்டில், திருஅவை சட்டம் எண் 838ல் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருவழிபாட்டு நூல்களை மொழிபெயர்ப்பு செய்யும் பொறுப்பை, திருப்பீட திருவழிபாட்டுப் பேராயத்திடமிருந்து நீக்கி, அந்தப் பொறுப்பை, தேசிய ஆயர்கள் பேரவைகளிடம் ஒப்படைத்துள்ளார் திருத்தந்தை.

திருத்தந்தையின் Magnum Principium என்ற ஏட்டில் கூறப்பட்டுள்ளது, சட்டமுறையான அதிகார அளவில் இடம்பெற்றுள்ள சிறிய மாற்றமாக இருந்தாலும், திருத்தந்தையின் இந்நடவடிக்கை குறிப்பிடத்தக்க நல் தாக்கத்தைக் கொண்டிருக்கின்றது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

திருவழிபாட்டு நூல்களின் மொழிபெயர்ப்பையொட்டி, 1990களில் ஆங்கிலம் பேசும் உலகில் இடம்பெற்ற பிரச்சனையை விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.