2017-09-15 16:15:00

போலந்து அரசின் புலம்பெயர்வோர் கொள்கைக்கு ஆயர்கள் எதிர்ப்பு


செப்.15,2017. போலந்து நாட்டு அரசின் புலம்பெயர்வோர்க்கு எதிரான கொள்கைகளையும், அந்நாட்டு அரசியல் அமைப்பில் கொண்டுவரப்படும் சீர்திருத்தங்களையும் குறை கூறியுள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

கத்தோலிக்கர்களான போலந்தின் ஆளும்கட்சி உறுப்பினர்கள், தாங்கள் அறிக்கையிடும் விசுவாசப் போதனைகளுக்கு எதிராக, அவர்கள் எடுக்கும் தீர்மானங்கள் உள்ளன என்றும், ஆயர்கள் கூறியுள்ளனர்.

போலந்து நாட்டில் பத்து குடிமக்களுக்கு ஒன்பது பேர் வீதம், கத்தோலிக்கராய் உள்ளவேளை, அந்நாட்டின் ஆளும் கட்சி, கத்தோலிக்கரின் ஆதரவை இழக்கும் ஆபத்தையும் எதிர்கொள்கின்றது என ஆயர்கள் எச்சரித்துள்ளனர்.

2015ம் ஆண்டில், போலந்தின் சட்டம் மற்றும் நீதிக்கட்சி, திருஅவையின் ஆதரவோடு  ஆட்சிக்கு வந்தது. இக்கட்சி பரிந்துரைக்கும் விழுமியங்களை வரவேற்று, சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களிலுள்ள பங்குக் குருக்கள், தங்கள் மறையுரைகளில் இக்கட்சிக்கு ஆதரவாகப் பேசினர் என்று, AP ஊடகச் செய்தி ஒன்று கூறுகின்றது.

ஆதாரம் : AP /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.