2017-09-20 16:10:00

பாலஸ்தீனாவில் இஸ்ரேல் அரசின் ஆக்கிரமிப்பு போதும்


செப்.20,2017. பாலஸ்தீன நாட்டில் இஸ்ரேல் அரசு மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பை நிறுத்தும்படி உலக நாடுகள் சொல்லும் காலம் வந்துள்ளது என்று Pax Christi International என்ற அமைதி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

Pax Christi அமைப்பும், உலக கிறிஸ்தவ சபைகளின் கழகமும் இணைந்து, செப்டம்பர் 17 கடந்த ஞாயிறு முதல், 24, வருகிற ஞாயிறு முடிய, பாலஸ்தீன, இஸ்ரேல் அமைதி உலக வாரத்தை கடைபிடிக்கும் இத்தருணத்தில், இந்த அழைப்பு விடப்பட்டுள்ளது.

1967ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி முதல், 10ம் தேதி முடிய பாலஸ்தீன, இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நடைபெற்ற போரைத் தொடர்ந்து, இஸ்ரேல் அரசு தன் ஆக்ரமிப்பைத் துவங்கியது என்று கூறியுள்ள Pax Christi அமைப்பு, 50 ஆண்டுகளாக நடைபெறும் இந்த அநீதமான ஆக்ரமிப்பு முடிவுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

உலக நாடுகள், இவ்விரு நாடுகளுக்கும் ஆயுதங்களை வழங்குவதை முற்றிலும் நிறுத்தினால் மட்டுமே, இவ்விரு நாடுகளுக்கும் இடையே நிகழும் மோதல்கள் முடிவுக்கு வரும் என்று Pax Christi அமைப்பு கூறியுள்ளது.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.