சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ ஆசியா

உரையாடல் என்ற கடினமான பாதை என்றும் திறந்துள்ளது

கொரிய ஆயர்கள் - RV

22/09/2017 16:47

செப்.22,2017. இராணுவ வலிமையைப் பறைசாற்றும் ஆயுதங்களும், ஏவுகணைகளும், உலகில் ஒருநாளும் அமைதியைக் கொணரப்போவதில்லை என்று, கொரிய ஆயர்கள் கூறியுள்ளனர்.

கொரிய தீபகற்பத்தில் நிலவும் ஆபத்தானச் சூழலை சரிசெய்ய, உரையாடல் என்ற கடினமான பாதை என்றும் திறந்துள்ளது என்பதை, உலகத் தலைவர்கள் உணரவேண்டும் என்று, கொரிய ஆயர் பேரவையின் நீதி, அமைதி பணிக்குழுவின் தலைவர், ஆயர் Lazzaro You Heung-sik அவர்கள் கூறினார்.

பட்டினியாலும், வியாதிகளாலும் துன்புறும் வடகொரிய மக்களுக்கு உதவும் வண்ணம், அண்மையில், தென் கொரியத் திருஅவை, அந்நாட்டிற்கு 80 இலட்சம் டாலர்கள் மதிப்புள்ள பொருள்களை, உணவாகவும், மருந்தாகவும் அனுப்பியுள்ளது என்பதைக் குறிப்பிட்ட ஆயர் Heung-sik அவர்கள், அந்நாட்டில் துன்புறும், குழந்தைகள், மற்றும், வயது முதிர்ந்தோரைப் பற்றி அனைத்து தலைவர்களும் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று கூறினார்.

தற்போதைய நெருக்கடியானச் சூழலில் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள இரு கொரிய நாடுகள், ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடு அனைத்தும், உரையாடல் வழிகளில் நம்பிக்கை இழக்கக்கூடாது என்று ஆயர் Heung-sik அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

22/09/2017 16:47