2017-10-02 16:34:00

தாய்வான் அரசுத்தலைவர் திருத்தந்தைக்கு அழைப்பு


அக்.02,2017. தாய்வான் அரசுத்தலைவர் Tsai Ing-wen அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, தன் நாட்டிற்கு திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளுமாறு, கடந்த ஈராண்டுகளில் நான்காவது முறையாக அழைப்பு விடுத்துள்ளார் என்று, UCA செய்தி கூறுகின்றது.

திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்களை, தனது அலுவலகத்தில் சந்தித்தவேளை, மனிதாபிமான உதவிகள் மற்றும் பிற விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடியபின், திருத்தந்தை தாய்வானுக்கு வருகைதருமாறு அழைப்பு விடுத்தார், அரசுத்தலைவர் Tsai Ing-wen.

அக்டோபர் ஒன்று இஞ்ஞாயிறு முதல், ஏழாம் தேதி வரை, தாய்வானின் Kaohsiung நகரில் நடைபெற்றுவரும், கடல் தொழிலாளருக்கு மறைப்பணி ஆற்றுவது குறித்த 24வது உலக மாநாட்டில் கலந்துகொள்ளும் கர்தினால் டர்க்சன் அவர்கள், தாய்வான் அரசுத்தலைவரையும் சந்தித்து உரையாடினார்.

மீன்பிடித் தொழிலில் உரிமை மீறல்கள் பற்றி கவனம் செலுத்துகின்ற இம்மாநாட்டில், ஐம்பது நாடுகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட வல்லுனர்கள் கலந்துகொள்கின்றனர். 

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.