2017-10-03 16:37:00

அ.பணி டாம் உழுன்னலிலுக்கு அன்னை தெரேசா விருது


அக்.03,2017. போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டில் கடத்தப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ள இந்திய அருள்பணியாளர் டாம் உழுன்னலில் அவர்கள், ஏமன்  நாட்டில் ஆற்றிய மறைப்பணிகளைப் பாராட்டும் விதமாக, அவருக்கு அன்னை தெரேசா விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை நகரை மையமாகக் கொண்ட Harmony Foundation, சமூக நீதிக்கான அன்னை தெரேசா விருதை, சலேசிய அருள்பணியாளர் டாம் உழுன்னலில் அவர்களுக்கு வழங்கவுள்ளது.

இவ்விருது பற்றி UCA செய்தியிடம் பேசிய இந்நிறுவனத்தை உருவாக்கிய, Abraham Mathai அவர்கள், இந்த ஆண்டு இவ்விருதின் தலைப்புக்கேற்ப, அருள்பணி டாம் அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வு அமைந்துள்ளது என்று கூறினார்.

"எல்லைகளைக் கடந்து பரிவிரக்கம் : புலம்பெயர்ந்தவர் பிரச்சனைக்கு பரிவிரக்கத்துடன் பதிலளித்தல்" என்பதே, இவ்வாண்டின் இவ்விருதின் தலைப்பு என்றும், Mathai அவர்கள் கூறினார்.

ஏமன் நாட்டின் ஏடெனில், 2016ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இஸ்லாம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, 18 மாதங்களுக்குப்பின் விடுதலைசெய்யப்பட்டுள்ள, அருள்பணி டாம் அவர்கள், தனது சொந்த மாநிலமான கேரளா திரும்பியுள்ளார். அவருக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.