2017-10-04 16:45:00

Opera Omniaவின் இரஷ்ய மொழிபெயர்ப்பு


அக்.04,2017. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பிரசுரங்களின் Opera Omnia என்ற தொகுப்பின் இரஷ்ய மொழியிலான 11வது தொகுதியை, திருத்தந்தையர் பிரான்சிஸ், 16ம் பெனடிக்ட் ஆகிய இருவரிடமும் வழங்கினார், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் வெளியுறவுத் துறை தலைவர் பேராயர் ஹிலாரியோன்.

‘திருவழிபாட்டின் இறையியல்’ என்ற தலைப்பிலான இத்தொகுப்பிற்கு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் முன்னுரை எழுதியுள்ளார் என்றும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் எழுதிய நாசரேத்து இயேசு என்ற நூலும் இரஷ்யத்தில், மொழிபெயர்க்கப்படும் என்றும், வத்திக்கானில் இயங்கும் 16ம் பெனடிக்ட் நிறுவனம் அறிவித்தது.

திருவழிபாட்டின் இறையியல் என்ற தொகுப்பு, மாஸ்கோவில், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையின் இறையியல் பள்ளியில், வருகிற வசந்த காலத்தில் இடம்பெறும் நிகழ்வில் ஆடம்பரமாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையின் வெளியீட்டு கழகம், “Sofia: Russian Idea, Idea of Europe,”என்ற பன்னாட்டு கழகம், வத்திக்கான் நூல் வெளியீட்டுக் கழகம், ஜோசப் இராட்சிங்கர்-16ம் பெனடிக்ட் நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்பால், இரஷ்ய மொழியில் இத்தொகுப்பு நூல் வடிவம் பெற்றுள்ளது.     

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.