சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

திருத்தந்தையின் அக்டோபர், நவம்பர் மாத நிகழ்வுகள்

பேராயர் பாலியாவுடன் திருத்தந்தை பிரான்சிஸ் - ANSA

06/10/2017 16:21

அக்.06,2017. இந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முக்கிய நிகழ்வுகளை வெளியிட்டுள்ளது திருப்பீடம். 

அக்டோபர் 11ம் தேதி புதன் மாலை 6.15 மணிக்கு, வத்திக்கானில் ஆயர்கள் மாமன்ற அரங்கத்தில், புதியவழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவை நடத்தும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளைச் சந்தித்தல், 

12ம் தேதி வியாழன் காலை 9 மணிக்கு, புனித மேரி மேஜர் வளாகத்திலுள்ள ஓரியன்டல் பாப்பிறை நிறுவனம் செல்லல், இச்சந்திப்பு முடிந்து, புனித மேரி மேஜர் பசிலிக்காவில் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றல்,

வருகிற நவம்பர் 2ம் தேதி, அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாளன்று, மாலை 3.15 மணிக்கு, நெத்தூனோவிலுள்ள அமெரிக்க கல்லறையில் செபித்து போரில் இறந்தவர்கள் நினைவாக திருப்பலி நிறைவேற்றல்,

அதே நாளில், அங்கிருந்து வரும்வழியில், மாலை 5 மணிக்கு, Fosse Ardeatine இறங்கி, 1944ம் ஆண்டு மார்ச் 24ம் தேதியன்று போரில் இறந்தவர்களுக்காகச் செபித்தல்

ஆகியவை, திருத்தந்தை  பிரான்சிஸ் அவர்களின் நிகழ்வுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போலந்து-உக்ரைன் ஒப்புரவின் விருது, வத்திக்கான் வானொலிக்கும், கீழை வழிபாட்டுமுறை பேராயத்திற்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிப்பு மற்றும் ஒப்புரவை ஊக்கவிப்பதற்கு உழைப்பவர்களுக்காக, 2001ம் ஆண்டில் இவ்விருது உருவாக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

06/10/2017 16:21