சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ உரைகள்

நற்செய்தி அறிவிப்பில் ஒன்றிணைந்து நடக்கவும் உழைக்கவும்..

'ஒன்றிணைந்த விவிலியக் கழகங்களின் உறவு அவை' அங்கத்தினர்களுடன்

06/10/2017 10:17

அக்.05,2017. பல்வேறு மொழிகளில் விவிலியப்பிரதிகள் மக்களைச் சென்றடைய உழைத்துவரும் அனவருக்கும் தூய ஆவியாரின் அருள் உள்ளது என, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் தன்னை சந்தித்த 'ஒன்றிணைந்த விவிலியக் கழகங்களின்  உறவு அவை' யின் அங்கத்தினர்களுக்கு உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒருநாளும் இறைவனிடம் வெறுமையாகத் திரும்பிச் செல்லாத ‘மீட்பு நற்செய்தி’யின் பணியாளர்களாகிய நாம், நற்செய்தியை வாசித்தல், அதற்கு செவிமடுத்தல், மற்றும் வாழ்வு வழியாக சான்று பகர்தல் ஆகியவைகள் வழியாக, ஊட்டம் பெறவேண்டும் என்றார்.

ஒப்புரவு நற்செய்தியின் பணியாளர்களாக ஒவ்வொருவரும் செயல்படவேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அச்சமின்றி நற்செய்தியை எடுத்துரைக்க நாம் அனைவரும் முன்வரவேண்டும், ஏனெனில், இது உண்மையின் நற்செய்தி என அக்கழக அங்கத்தினர்களிடம் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியை அறிவிக்க நாம் ஒன்றிணைந்து நடப்பது மட்டுமல்ல, ஒன்றிணைந்து செபிப்போம், மற்றும் உழைப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

06/10/2017 10:17