சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

நல்லவைகளைப் புரிந்துகொள்ளும் திறனை வளர்க்க உதவுதல்

பிரான்ஸ் நாட்டின் லியோன் மறைமாவட்ட அருள்பணியாளர்களுடன்

06/10/2017 10:23

அக்.05,2017. கல்வி நிலையங்கள் மற்றும் ஆசிரியர்களின் பணி குறித்து எடுத்துரைப்பதாக திருத்தந்தையின் இவ்வியாழன் தின டுவிட்டர் செய்தி இருந்தது.

'உண்மை, நன்மைத்தனம், அழகுச்செறிவு ஆகியவைகளைப் புரிந்துகொள்ளும் திறனை வளர்ப்பதற்கு உதவுவதாக, பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் பணி இருக்க வேண்டும்' என திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி கூறுகிறது. அக்டோபர் 05, இவ்வியாழனன்று உலக ஆசிரியர்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தையும், தன் டுவிட்டர் செய்தியை, இத்தினத்தை மையப்படுத்தி எழுதியிருந்தார்.

மேலும், இதே வியாழனன்று, பிரான்ஸ் நாட்டின் லியோன் மறைமாவட்ட  அருள்பணியாளர்கள் ஏறத்தாழ 100 பேரை சந்தித்து அவர்களுக்கு உரை ஒன்றும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

06/10/2017 10:23