சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ முதல் நிமிடம்

பாசமுள்ள பார்வையில்: ஆயுதங்களைவிட, அகிம்சை வலிமை மிக்கது

மகாத்மா காந்தியின் சிலையின்முன்ந் செபிக்கும் பள்ளிச் சிறார் - REUTERS

07/10/2017 09:12

'அகிம்சை', அதாவது, வன்முறையின்மை என்ற பண்பை உலகிற்குச் சொல்லித்தந்த மகாத்மா காந்தி அவர்கள், அகிம்சையைப் பற்றி கூறியுள்ள ஒரு சில கருத்துக்கள் இதோ:

"என் மதத்தின் அடித்தளம், உண்மையும், அகிம்சையும். உண்மை, என் கடவுள். அகிம்சை, அந்தக் கடவுளை அடையும் வழி."

"அகிம்சை என்பது, மனித குலத்திடம் உள்ள மாபெரும் சக்தி. அழிப்பதற்கென மனிதர்கள் கண்டுபிடித்துள்ள அத்தனை ஆயுதங்களையும்விட, அகிம்சை வலிமை மிக்கது."

"அகிம்சை என்பது, வேண்டும்போது அணிந்துகொண்டு, வேண்டாதபோது களைந்துவிடும் ஆடையைப்போன்றது அல்ல. அது, நம் உள்ளத்தில் உறைந்து, நம் உயிரின் அங்கமாகவேண்டும்."

"பல கொள்கைகளுக்காக நான் உயிரை இழக்க தயார். ஆனால், எந்த ஓர் கொள்கைக்காவும் அடுத்தவர் உயிரைப் பறிக்கமாட்டேன்."

அகிம்சையின் தந்தை, மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி, வன்முறையின்மை உலக நாளென கடைபிடிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

07/10/2017 09:12