சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

கடவுள் நம் இதயங்களில் நம்பிக்கையை விதைக்கிறார்

குரோவேசிய பிரதமரின் மகனுடன் திருத்தந்தை - EPA

10/10/2017 16:16

அக்.10,2017. “கடவுள் ஏமாற்றாதவர்! அவர் நம் இதயங்களில் நம்பிக்கையை விதைக்கிறார், அதன்வழியாக, அது மலர்ந்து கனிதர முடியும்” என்ற வார்த்தைகள்,  இச்செவ்வாயன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாயின.

மேலும், அக்டோபர் 11, இப்புதனன்று திருப்பீடத்தின், புதியவழி நற்செய்தி அறிவிப்பு அவை நடத்தும் கூட்டத்தில், அன்று மாலை 6.15 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொண்டு தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வார்.

‘புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணியில், கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி’ என்ற தலைப்பில், இப்புதன் மாலை 4 மணிக்கு, ஆயர்கள் மாமன்ற அரங்கத்தில் ஆரம்பிக்கும் இக்கூட்டத்தை, புதியவழி நற்செய்தி அறிவிப்பு அவைத் தலைவர், பேராயர் Rino Fisichella அவர்கள் ஆரம்பித்து வைப்பார்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் விரும்பிய புதுப்பித்தலில், கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வியின் பங்கு பற்றி, தூரின் பேராயர் Cesare Nosiglia அவர்களும், திருஅவையின் மறைக்கல்வியின் விரிவுரையில் முக்கிய கோட்பாடுகள் பற்றி வியன்னா பேராயர் கர்தினால் Christoph Schönborn அவர்களும், மறைக்கல்வி பற்றிய தியானச் சிந்தனைகளை, பேராசிரியர் Katharina Karl அவர்களும், இக்கூட்டத்தில் வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

10/10/2017 16:16