சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வத்திக்கான் \ அறிக்கைகள்

இறையடியார்களின் வீரத்துவமான புண்ணிய வாழ்வு ஏற்பு

இறையடியார் அருள்பணி Donizetti Tavares de Lima - RV

11/10/2017 08:40

அக்.10,2017. முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கென ஒன்பது இறையடியார்களின் வீரத்துவமான புண்ணிய வாழ்வு பற்றிய விவரங்களை ஏற்றுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பீட புனிதர்நிலை பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள், இத்திங்கள் மாலையில் திருத்தந்தையைச் சந்தித்து இந்த விவரங்களைச் சமர்ப்பித்தார்.

பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த மறைசாட்சியான அருள்பணி Tullio Maruzzo, பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையைச் சேர்ந்த பொதுநிலை விசுவாசி Luigi Obdulio Arroyo Navarro ஆகிய இருவரும், 1981ம் ஆண்டு ஜுலை முதல் நாளன்று, குவாத்தமாலா நாட்டின் Los Amatesல், கிறிஸ்தவ விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டனர்.

இன்னும், பிரேசில் நாட்டின் அருள்பணி Donizetti Tavares de Lima, (1882-1961);

உக்ரைன் நாட்டின் கப்புச்சின் சபையின் அருள்பணி Serafino Kaszuba (1910-1977);  

இஸ்பெயின் நாட்டின் இயேசு மரி யோசேப்பு சபையின் அருள்பணி Magín Morera y Feixas (1908-1984);

இஸ்பெயினில் பிறந்து இத்தாலியில் காலமான நேப்பிள்ஸ் மருத்துவ சபையை ஆரம்பித்த Maria Lorenza Requenses in Longo (1463 - 1539);

பிரான்ஸ் நாட்டின் Montpellierன் புனித பிரான்சிஸ் மூன்றாம் சபையை ஆரம்பித்த அருள்சகோதரி Francesca dello Spirito Santo (1820-1882)

உக்ரைனில் பிறந்து போலந்தில் காலமான, சிலுவையின் பிரான்சிஸ்கன் சகோதரிகள் சபையை நிறுவிய  Elisabetta Rosa Czacka   (1876-1961);

இத்தாலியில் புனித வின்சென்ட் பிறரன்பு சபை சகோதரிகள் சபையைத் தோற்றுவித்த, பொதுநிலை விசுவாசியான Francesco Paolo Gravina (1800-1854);

ஆகிய இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வு பற்றிய விவரங்களை ஏற்றுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

11/10/2017 08:40