சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உலகம் \ அறிந்து கொள்வோம்

உலகில் வேலைவாய்ப்பற்றவர்கள் 20 கோடிக்குமேல்

தாய்வானில் பாக்கு பறிக்கும் தொழிலாளர்கள் - AFP

11/10/2017 08:46

அக்.10,2017. 2017ம் ஆண்டில், உலகில், இருபது கோடிக்கு அதிகமான மக்கள் வேலையின்றி உள்ளனர் என்றும், இவ்வெண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட, 34 இலட்சம் அதிகம் என்றும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின், உலக தொழில் நிறுவனம்  இத்திங்களன்று அறிவித்துள்ளது.

‘உலக வேலைவாய்ப்பும், சமூகக் கண்ணோட்டமும் 2017 : நீடித்த நிலையான தொழில்களும், வேலைகளும்’ என்ற தலைப்பில், ILO எனப்படும் உலக தொழில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மந்தமான வளர்ச்சியிலுள்ள, சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்கள் உயிரூட்டம் பெறுவதற்கு கொள்கைகள் அமைக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளது.

130க்கும் மேற்பட்ட நாடுகளில் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில், 2008ம் ஆண்டில் உலகளாவிய நிதித்துறையில் திடீர் சரிவைக் காண்பதற்குமுன், பெரிய வர்த்தகங்களைவிட, சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களில், வேலைவாய்ப்பு வேகமாக உயர்ந்தது எனத் தெரிவதாக, ILO நிறுவனம் கூறியுள்ளது.

2016ம் ஆண்டில், தனியார் தொழில் நிறுவனங்கள், உலகளாவிய வேலைவாய்ப்பில் உயர்ந்து, 280 கோடிப் பேருக்கு வேலைகளை வழங்கியதாகவும், இது, உலகளாவிய  மொத்த வேலைவாய்ப்பில் 87 விழுக்காடாக இருந்தது எனவும், ILO நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.   

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி

11/10/2017 08:46