சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறைக்கல்வி, மூவேளை உரை

பார்வையற்றவர்க்கு திருத்தந்தை செபம், ஒருமைப்பாடு

அப்பரெசிதா அன்னை மரியாவிடம் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் - ANSA

11/10/2017 16:06

இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் பங்குகொண்ட ஆங்கிலம் பேசும் திருப்பயணிகளை வாழ்த்தியபோது, உலகிலுள்ள பார்வையற்ற மக்களுக்குத் தனது செபங்களையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவிப்பதாகக் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 12, இவ்வியாழனன்று உலக பார்வை தினம் கடைப்பிடிக்கப்படுவதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, பார்வையற்றவர்கள் மற்றும், பார்வைத் திறனற்றவர்களுடன் தனது தோழமையுணர்வை வெளிப்படுத்தினார்.

இன்னும், பிரேசில் நாட்டின் அப்பரெசிதாவில் அன்னை மரியா காட்சியளித்ததன் முன்னூறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அங்கு நடைபெறும் கொண்டாட்டங்களுக்குச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அப்பரெசிதா தேசிய திருத்தலத்தில், அக்டோபர் 10, இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள மூன்று நாள் கொண்டாட்டங்களில், தனது பிரிதிநிதியாக கலந்துகொள்கின்ற, திருப்பீட இலத்தீன் அமெரிக்க அவை மற்றும், ஆயர்கள் பேராயத்தின் முன்னாள் தலைவர் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள் வழியாக, இச்செய்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

11/10/2017 16:06