2017-10-14 16:20:00

Rakhineல் ஒற்றுமையை ஏற்படுத்தும் அரசின் முயற்சிக்கு ஆதரவு


அக்.14,2017. மியான்மாரின் Rakhine மாநிலத்தில் ஒற்றுமையும் வளர்ச்சியும் ஏற்படுவதற்கு அந்நாட்டின் சனநாயக கட்சித் தலைவர் ஆங் சான் சூச் சி அவர்கள் எடுத்துள்ள முயற்சிகளுக்கு, அந்நாட்டு கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் தன் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் Rakhine மாநிலத்தில், மனிதாபிமான உதவி, மீள்குடியிருப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக்காக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்றிய அமைப்புக்கு தலைமையேற்று நடத்தவுள்ளார், சூச் சி.

Arakan Rohingya மீட்பு இராணுவத்தால் (ARSA), கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி, காவல்துறையும், இராணுவ முகாம்களும் தாக்கப்பட்டதையடுத்து, அப்பகுதியில் அமைதியைக் கொணரும் நோக்கத்தில் இப்புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 9க்கும் 11ம் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களில் மட்டும், ஏறத்தாழ 15 ஆயிரம் ரொகிங்யா இன மக்கள் பங்களாதேஷ் சென்றுள்ளனர்.

திருத்தந்தையின் மியான்மார் திருத்தூதுப் பயணம் மற்றும் Rakhine மாநிலத்தின் அமைதிக்காக, நாடெங்கும் சூச் சி அவர்கள் ஏற்பாடு செய்து வரும் பல்சமய செபக் கூட்டங்களில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.  

ஆதாரம் : Agencies /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.