2017-10-18 15:45:00

திருத்தந்தை:கலைஞர்கள், விசுவாசத்தின் அழகைப் பரப்புவார்களாக


அக்.18,2017. “கலைஞர்கள், விசுவாசத்தின் அழகைப் பரப்புவார்களாக, மற்றும், கடவுள் படைப்பின் மாட்சியையும், அவர் நம் எல்லார் மீதும் வைத்துள்ள எல்லையற்ற அன்பையும் அறிவிப்பார்களாக” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இப்புதனன்று வெளியாயின.

மேலும், “நான் பசியாய் உள்ளேன், நான் அந்நியனாய் உள்ளேன், நான் ஆடையின்றி உள்ளேன், நான் நோயாய் உள்ளேன், நான் புலம்பெயர்ந்தவர் முகாமில் அடைக்கப்பட்டு உள்ளேன் என்று, சமூகத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ள மற்றும் ஒதுக்கப்பட்டுள்ள நம் சகோதர, சகோதரிகள் எழுப்பும் அழுகுரல்களைக் கேட்போம்” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இன்ஸ்டகிராம் செயலியில் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.

அக்டோபர் 17, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட, உலக வறுமை ஒழிப்பு தினத்தை நினைவுகூர்ந்து, இவ்வாறு ஒதுக்கப்பட்ட மக்களுக்காக அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.