2017-10-19 17:10:00

மாற்றுத்திறனாளிகள்,மறைக்கல்வியாளருக்கு கருத்தரங்கு


அக்.19,2017. திருஅவையின் வாழ்வில் மாற்றுத்திறனாளிகள் முழுவதும் பங்கெடுப்பதற்கு உதவியாக, உரோம் நகரில் உலகளாவிய கருத்தரங்கு ஒன்றை இவ்வெள்ளியன்று வத்திக்கான் ஆரம்பிக்கவுள்ளது.

பிரிட்டனை மையமாகக் கொண்ட Kairos நிறுவனத்தின் உதவியுடன், புதியவழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவை, "மறைக்கல்வியும் மாற்றுத்திறனாளிகளும் : திருஅவையின் அன்றாட மேய்ப்புப்பணி வாழ்வில் ஈடுபடுத்துவதன் அவசியம்" என்ற தலைப்பில் இக்கருத்தரங்கை நடத்தவுள்ளது.

உரோம் உர்பானியானம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த மூன்று நாள் கருத்தரங்கில், 450க்கும் மேற்பட்ட வல்லுனர்கள் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள். 

Kairos நிறுவனம், மாற்றுத்திறனாளிகளின் ஆன்மீக மற்றும் சமயத் தேவைகளில் கவனம் செலுத்துகின்றது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.