2017-10-25 16:52:00

சிறார் திருமணங்களை நிறுத்துவதற்கு 100 ஆண்டுகள்


அக்.25,2017. மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்காவில் சிறார் திருமணங்களை நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்படவில்லையெனில், அப்பகுதிகளில் அவற்றை நிறுத்துவதற்கு நூறு ஆண்டுகளுக்கு மேல் எடுக்கக்கூடும் என்று, ஐ.நா.வின் யுனிசெப் எச்சரித்துள்ளது.

இந்நிலை, இலட்சக்கணக்கான சிறார் மணப்பெண்களின் வாழ்வைப் பாதிக்கும் மற்றும் அப்பகுதியின் வளமையை முடக்கும் என்று, யுனிசெப் வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகின்றது.

சிறுமிகள் பள்ளிகளில் நீண்ட காலம் படிப்பதன் வழியாக, 18 வயதுக்குள் திருமணம் செய்து வைக்கப்படுவது குறையும் என்றும், காம்பியா, கினி பிசாவ், டோகோ, கானா, ருவாண்டா ஆகிய நாடுகளில் கடந்த 25 ஆண்டுகளில், சிறார் திருமணங்கள், 40 முதல் 60 விழுக்காடு வரை குறைந்துள்ளன என்றும் யுனிசெப் கூறியது.

மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்காவில், 18 வயதுக்குமுன், பத்தில் 4 சிறுமிகள் வீதமும், 15 வயதுக்குமுன் மூன்றில் ஒரு சிறுமி வீதமும் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.