2017-10-28 15:40:00

பாகிஸ்தான் முஸ்லிம் பிறரன்பு அமைப்பு முடக்கப்பட்டுள்ளதற்கு..


அக்.28,2017. பாகிஸ்தானில், பிறரன்பு அமைப்பு ஒன்றின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதற்கு, கத்தோலிக்க திருஅவைத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மருத்துவ அவசர உதவி வாகனங்கள் மற்றும் வீடற்றவர்க்கு ஆதரவளிக்கும், உலகின் மிகப் பெரிய பிறரன்பு அமைப்புக்களில் ஒன்றான Abdul Sattar Edhi என்ற நிறுவனத்தின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிறுவனம் கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இவ்விவகாரத்தில், பாகிஸ்தான் அரசு தலையிட வேண்டுமென்று, திருஅவைத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இப்பிரச்சனை விரைவில் தீர்க்கப்படாவிட்டால், வருகிற நவம்பரில், மாநில அதிகாரிகளுடன் நடைபெறும் கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து கேள்வி எழுப்பவுள்ளதாக, காரச்சி புனித பாட்ரிக் பேராலய அதிபர் அருள்பணி Mario Rodrigues அவர்கள் யூக்கா செய்தியிடம் அறிவித்தார்.

Abdul Sattar Edhi பிறரன்பு நிறுவனத்தின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதற்கு, மாஃபியா குற்றக்கும்பல் காரணம் என்றும், இக்கும்பல், காவல்துறைக்கு இலஞ்சம் கொடுத்து அதன் ஆதரவைப் பெறுகின்றது என்றும் சொல்லப்படுகின்றது.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.