2017-11-03 14:28:00

காஷ்மீர் பகுதியில் அமைதி நிலவ கத்தோலிக்க கோவில் மணி


நவ.02,2017. காஷ்மீர் பகுதியில் அமைதி நிலவவேண்டுமென்ற நோக்கத்துடன், இந்து, சீக்கிய, இஸ்லாமிய, மாற்றம் கிறிஸ்தவ தலைவர்கள், ஸ்ரீநகரில் அமைந்துள்ள ஒரு கத்தோலிக்க கோவிலின் மணியை இணைந்து ஒலித்தனர்.

120 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்குடும்ப கோவிலின் மணி பழுதடைந்ததால், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலிக்காமல் இருந்துவந்த வேளை, அண்மையில், அது மீண்டும் சீரமைக்கப்பட்டு, கடந்த ஞாயிறு மீண்டும் ஒலிக்கப்பட்டது.

மக்களை செபிப்பதற்கு அழைக்கும் கோவில் மணி, அமைதிக்கும் அழைப்பு விடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில், பல்சமயத் தலைவர்கள் இணைந்து இந்தக் கோவில் மணியை ஒலித்தனர் என்று, திருக்குடும்பக் கோவிலின் அருள்பணியாளர் இராய் மாத்யூஸ் அவர்கள் UCA செய்தியிடம் கூறினார்.

காஷ்மீர் பகுதியில் நிலவிய கலவரங்களில், கிறிஸ்தவர்கள் எவ்வகையிலும் இலக்காகக் கருதப்படவில்லை என்றும், அவர்கள் எந்த அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கவில்லை என்றும் ஜம்மு-காஷ்மீர் ஆயர் ஈவான் பெரேரா அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.