2017-11-04 14:21:00

பங்களாதேஷ் திருத்தூதுப் பயணங்களுக்குத் தயாரிப்பு


நவ.04,2017. இம்மாதம் 30ம் தேதி முதல், டிசம்பர் 2ம் தேதி வரை, பங்களாதேஷ் நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத் தயாரிப்புகள் மிகத் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன என்று, டாக்கா பேராயர் கர்தினால் பாட்ரிக் ரொசாரியோ அவர்கள் அறிவித்தார்.

திருத்தந்தையின் பயணத்திட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கென மக்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்வது, கூட்டங்கள் நடத்துவது, ஆலயங்களில், திருப்பயணிகள் குழுவாகச் செபிப்பது என்று, பன்முகத் தயாரிப்புகள் இடம்பெற்று வருகின்றன என்று, கர்தினால் பாட்ரிக் ரொசாரியோ அவர்கள், ஆசியச் செய்தியிடம் கூறினார்.

உதயன் பூங்காவில் திருத்தந்தை நிறைவேற்றவிருக்கும் திருப்பலியில், ஏறத்தாழ ஒரு இலட்சம் கத்தோலிக்கரும், பிற கிறிஸ்தவ சபைகளிலிருந்து ஏறத்தாழ பத்தாயிரம் பேரும், டாக்கா பேராலய நிகழ்வில் ஏறத்தாழ 800 பொதுநிலையினரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார், கர்தினால் பாட்ரிக் ரொசாரியோ.

மேலும், இஸ்லாமியக் குழுக்களால் எதுவும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என்று செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.