நவ.08,2017. சுற்றுச்சூழலை மையப்படுத்திய நீதி, அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற வேண்டுகோளை, உலகத் திருஅவைகள் கழகம், லூத்தரன் உலக அமைப்பு, மற்றும் கூட்டணி இயக்கம் என்ற மூன்று அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ளன.
நவம்பர் 6ம் தேதி முதல், 17ம் தேதி முடிய ஜெர்மனியின் போன் (Bonn) நகரில் நடைபெற்று வரும் ஐ.நா.வின் காலநிலை மாற்றம் கருத்தரங்கான COP23ஐயொட்டி, இந்த விண்ணப்பம் விடுக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பாரிஸ் உலக உச்சி மாநாட்டில் காலநிலை மாற்றம் குறித்து உலகின் பெரும்பான்மை நாடுகள் கையொப்பமிட்ட முடிவுகளை, COP23 உறுதி செய்யவேண்டும் என்று இவ்வியக்கங்கள் விண்ணப்பித்துள்ளன.
முன்னெப்போதும் இல்லாத அளவு, மனித வரலாற்றில் காலநிலை மாற்றங்களால் மிக அதிகமான அப்பாவி மக்கள் துன்புறுவதை மனதில் கொண்டு, COP23 மாநாட்டில் கலந்துகொள்வோர், முடிவுகள் எடுக்கவேண்டும் என்று உலகத் திருஅவைகள் கழகத்தின் பொதுச் செயலர், Olvav Fykse Tveit அவர்கள் கூறியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
சமூக வலைத்தளங்கள்: