2017-11-08 15:55:00

பிலிப்பீன்ஸ் நாட்டில், தேசிய இளையோர் நாள் நிகழ்வுகள்


நவ.08,2017. நவம்பர் 6 இத்திங்கள் முதல், 10 இவ்வெள்ளி முடிய, பிலிப்பீன்ஸ் நாட்டின் மிந்தனாவோ பகுதியில், தேசிய இளையோர் நாள் நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்று ஃபீதேஸ் செய்தி கூறுகிறது.

இளையோர், சமுதாய மாற்றத்தின் முக்கிய காரணிகள் என்பதை அவர்களுக்கு உணர்த்தும் வண்ணம் இளையோர் நாள் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன என்று, இந்நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் Zamboanga உயர் மறைமாவட்டத்தின் பேராயர் Romulo Tolentino Dela Cruz அவர்கள் ஃபீதேஸ் செய்தியிடம் கூறினார்.

 “வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்” (லூக்கா 1:49) என்ற மையக்கருத்துடன் நடைபெற்றுவரும் இந்த இளையோர் நாள் நிகழ்வுகளில், 2,300க்கும் அதிகமான இளையோர் பங்கேற்று வருகின்றனர்.

இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கும், பிலிப்பீன்ஸ் அரசுக்கும் இடையே நடைபெற்ற மராவி நகர் மோதல்களைத் தொடர்ந்து, நெருக்கடி நிலை நடைமுறையில் உள்ள மிந்தனாவோ பகுதியில், இளையோர் நாள் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.