2017-11-09 15:40:00

நவம்பர் 19, வறியோரின் உலக நாள், முதல் முறையாக...


நவ.09,2017. திருவழிபாட்டின் பொதுக்காலம் 33ம் ஞாயிறு, நவம்பர் 19ம் தேதியன்று சிறப்பிக்கப்படும் வேளையில், அது, முதல் முறையாக, வறியோரின் உலக நாளாக சிறப்பிக்கப்படும்.

வறியோரின் முதல் உலக நாளான, நவம்பர் 19, ஞாயிறு காலை 10 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருப்பலி நிறைவேற்றுவார் என்று, திருப்பீட வழிபாட்டுத் துறையின் தலைவர், அருள்பணி குயிதோ மரீனி அவர்கள் அறிவித்துள்ளார்.

2015, 2016ம் ஆண்டுகளில் சிறப்பிக்கப்பட்ட இரக்கத்தின் யூபிலி ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களோடு உரோம் நகரில் யூபிலியை சிறப்பித்த திருத்தந்தை, அதன் விளைவாக, வறியோரின் உலக நாளை உருவாக்கினார்.

வறியோரின் உலக நாள், இவ்வாண்டு முதன்முறையாக சிறப்பிக்கப்படுவதையொட்டி, "வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நாம் அன்புகூருவோம்" என்ற தலைப்பில், இவ்வாண்டு சூன் 13ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்புச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.