2017-11-09 15:34:00

பெர்லின் சுவர் வீழ்ச்சியையொட்டி திருத்தந்தையின் டுவிட்டர்


நவ.09,2017. "இவ்வுலகை பிரிக்கும் சுவர்களை தகர்ப்பதற்கு, சந்திக்கும் கலாச்சாரம் வளர்க்கப்படட்டும்" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக நவம்பர் 9, இவ்வியாழனன்று வெளியாயின.

ஜெர்மன் நாட்டை கிழக்கு, மேற்கு என்று பிரிந்திருந்த பெர்லின் சுவர், 1989ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி, வீழ்ந்ததை நினைவுகூரும் இந்நாளில், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி, இந்நிகழ்வையொட்டியதாய் அமைந்திருந்தது.

மேலும், நவம்பர் 9, இவ்வியாழனன்று, பரகுவே நாட்டு அரசுத்தலைவர் Horacio Manuel Cartes Jara அவர்களும் அரசு அதிகாரிகளும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

நவம்பர் 9, இவ்வியாழனன்று வெளியிடப்பட்ட "மண்ணகத்திற்கும், விண்ணகத்திற்கும் இடையே" என்ற நூலுக்கு திருத்தந்தை அணிந்துரையொன்றை வழங்கியுள்ளார்.

இயேசுவின் திரு இருதய மறைப்பணி அருள் சகோதரிகள் என்ற துறவு சபையை நிறுவிய புனித Frances Xavier Cabrini இறையடி சேர்ந்த நூறாம் ஆண்டு, இவ்வாண்டு டிசம்பர் 22ம் தேதி சிறப்பிக்கப்படுவதையடுத்து, அப்புனிதரை மையப்படுத்தி, "மண்ணகத்திற்கும், விண்ணகத்திற்கும் இடையே" என்ற நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.