2017-11-11 15:08:00

கடற்கரை பாதுகாப்பில் இலங்கை பல்மத மாணவிகளின் பங்களிப்பு


நவ.,11,2017. இலங்கையின் Kalutara நகரின் திருக்குடும்ப துறவுசபையால் நடத்தப்படும் பள்ளியில் பயிலும், கத்தோலிக்க மற்றும் புத்தமத மாணவிகள் இணைந்து, கடற்கரை சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Kalutara திருக்குடும்ப துறவுசபை பள்ளியினால் துவக்கப்பட்டுள்ள 'பசுமைப் பள்ளி' என்ற திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்த மாணவிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மட்டுமல்ல, மாறாக, கடற்கரைப் பகுதிகளின் இயற்கை வளங்களுக்கு மறுவாழ்வு வழங்குவதிலும் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

Kalutara குடிமக்கள் மன்றத்துடன் நடத்திய கலந்துரையாடலுக்குப்பின், அப்பகுதியிலுள்ள Kalido கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை முதலில் துவக்கியதாகக் கூறினார், இப்பணிகளுக்கு தலைமையேற்று நடத்திவரும் அருள்சகோதரி Charitha Thandalage.

கழிவுகள், மீள்சுழற்சி பொருட்கள் என, வகை வகையாக தரம் பிரித்து சேகரிக்கப்படும் பொருட்களை, அப்புறப்படுத்துவதில், Kalutara குடிமக்கள் மன்றமும் உதவி வருகிறது. இந்த கத்தோலிக்கப் பள்ளியின் முயற்சியால், சுற்றுச்சூழல் குறித்த மாணவிகளின் அணுகுமுறையிலும் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.