2017-11-13 16:24:00

திருத்தந்தையின் நிதி உதவியால் விவசாயக் கருவிகள்


நவ.13,2017. பசியால் வாடும் தென் சூடான் நாட்டிற்கு என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய நிதியுதவியின் துணை கொண்டு, அந்நாட்டு விவசாயத்தை ஊக்குவிக்க உள்ளதாக FAO எனும் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனம் அறிவித்துள்ளது.

FAO நிறுவனம் வழியாக திருத்தந்தை வழங்கிய 25,000 யூரோக்களின் துணை கொண்டு 5000 குடும்பங்களுக்கு, அதாவது, 30,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு, விவசாயத்திற்கு தேவையான பொருட்களும், கருவிகளும் வழங்கப்பட்டுள்ளதாக உரைத்த தென் சூடானுக்கான FAO பிரதிநிதி Sergio Tissot அவர்கள், தற்போது வழங்கப்பட்டுள்ள விவசாயக் கருவிகள், ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவுவதாக இருக்கும் என்றார்.

காய்கறி விதைகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் உணவை தாங்களேத் தயாரித்து, பசிக்கொடுமையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்றார் Tissot.

திருத்தந்தையின் இந்த உதவிக்கு தென் சூடான் மக்கள் மிகவும் நன்றிக் கடன்பட்டவர்களாக இருப்பதாக உரைத்தார், அப்பகுதியில் பணியாற்றும் Episcopal கிறிஸ்தவ சபையின் போதகர் ஜெரெமியா டாபன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.