2017-11-14 16:42:00

கர்தினாலின் மரணம் குறித்து பிரான்சுக்கு அனுதாபச் செய்தி


நவ.,14,2017. பிரான்ஸ் நாட்டின் Marseilles முன்னாள் பேராயர், கர்தினால் Bernard Panafieu அவர்களின் மறைவையொட்டி, தன் ஆழ்ந்த இரங்கலை வெளியிடும் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Marseilles பேராயர் Georges Pontier அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ளச் செய்தியில், அப்பெருமறைமாவட்ட விசுவாசிகளுக்கும், கர்தினால் Panafieu அவர்களின் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்குமாறு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இன மக்கள் வாழும் Marseilles உயர் மறைமாவட்டத்தில், பல்வேறு கலாச்சாரங்களிடையேயும், மதங்களிடையேயும் அமைதியான இணக்க வாழ்வை உருவாக்குவதில் கர்தினால் Panafieu அவர்கள் எடுத்த அரிய முயற்சிகளை பாராட்டுவதாகவும் தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1931ம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் பிறந்த, கர்தினால் Panafieu அவர்கள், 1956ம் ஆண்டு அருள்பணியாளராகவும், 1974ம் ஆண்டு ஆயராகவும் அருள் பொழிவு பெற்றார்.

1995ம் ஆண்டு Marseilles உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுப்பேற்ற இவர், 2003ம் ஆண்டு, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

கர்தினால் Panafieu அவர்களின் மறைவைத் தொடர்ந்து, திருஅவையில் தற்போது கர்தினால்களின் எண்ணிக்கை 218 ஆக குறைந்துள்ளது. இதில், 120 பேர் மட்டுமே, திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய, 80 வயதிற்குட்பட்டவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.