2017-11-15 14:44:00

இந்தோனேசியாவில் "2018 - ஒருமைப்பாட்டின் ஆண்டு"


நவ.15,2017. இந்தோனேசியாவின் ஜகார்த்தா உயர் மறைமாவட்டத்தில், 2020ம் ஆண்டு முடிய நீடிக்கும் மூன்றாண்டு திட்டத்தின் துவக்கமாக, 2018ம் ஆண்டு, "ஒருமைப்பாட்டின் ஆண்டாக" கொண்டாடப்படும் என்று, ஜகார்த்தா பேராயர், இக்னேசியஸ் சுகார்யோ அவர்கள் அறிவித்துள்ளார்.

"ஒருமைப்பாட்டின் ஆண்டு, பஞ்சசீல கொள்கைகளைச் செயல்படுத்துவோம்" என்ற விருதுவாக்குடன் உருவாக்கப்பட்டுள்ள 2018ம் ஆண்டு திட்டங்கள், ஒருமைப்பாடு, உரையாடல், சகிப்புத்தன்மை, இரக்கம், மற்றும் சுற்றுச்சூழல் மீது அக்கறை என்ற பல வடிவங்களில் செயலாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருமைப்பட்டு உயிர்த்தெழும் இந்தோனேசியா நாடு, பிரிவுகளை வெற்றிகொள்ளும் என்றும், அதற்கு, அன்னை மரியா துணையிருப்பார் என்றும் கூறும்வண்ணம், இந்த ஆண்டின் இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.