சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

ஆஸ்திரியா நாட்டின் அரசுத்தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

ஆஸ்திரியா நாட்டின் அரசுத்தலைவர், Alexander Van der Bellen அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் - AP

16/11/2017 15:26

நவ.16,2017. ஆஸ்திரியா நாட்டின் அரசுத்தலைவர், Alexander Van der Bellen அவர்கள், தன் துணைவியார் மற்றும் அரசு அதிகாரிகளுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

ஆஸ்திரியா மற்றும், வத்திக்கான் ஆகிய இரு நாடுகளுக்கிடையே நிலவும் நல்லுறவு குறித்தும், ஆஸ்திரிய குடியரசுக்கு கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.

மேலும், நவம்பர் 19, வருகிற ஞாயிறு, கத்தோலிக்கத் திருஅவையில் முதன் முதலாக சிறப்பிக்கப்படும், வறியோர் உலக நாளுக்கு ஒரு முன்னோடியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறுமையைக் குறித்து இவ்வியாழனன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"வறுமை ஒரு விபத்தல்ல. நமது சகோதர, சகோதரிகளின் நன்மைக்காக, வறுமையின் காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை அகற்றவேண்டும்" என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

16/11/2017 15:26