2017-11-22 15:09:00

திருத்தந்தை: திருப்பலி, நலிந்தோருக்கு வழங்கப்படும் மருந்து


நவ.22,2017. கொடுமையான பசி ஆதிக்கம் செலுத்தும் உலகில் நாம் வாழ்கிறோம் என்றும், ரொட்டி மனித ஒருமைப்பாட்டிற்கு ஓர் அடையாளமாக இல்லை என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் கூறினார்.

Tv2000 என்ற இத்தாலிய தொலைக்காட்சி நிறுவனம், "எங்கள் தந்தாய்" என்ற தலைப்பில், உருவாக்கியுள்ள ஒரு தொடரின் ஐந்தாவது பகுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலியைக் குறித்தும், உலகில் நிலவும் பசி, பட்டினி ஆகிய கொடுமைகள் குறித்தும் தன் கருத்துக்களைக் கூறியுள்ளார்.

இறைவனின் பிரசன்னம், நாம் திருப்பலியில் பகிர்ந்தளிக்கும் அப்பத்தில் உள்ளது என்று கூறியத் திருத்தந்தை, திருப்பலி, வலியோருக்கு வழங்கப்படும் விருந்து என்பதைவிட, நலிந்தோருக்கு வழங்கப்படும் மருந்து என்று கூறுவதே பொருந்தும் என்று எடுத்துரைத்தார்.

இன்றைய உலகில் பரவியுள்ள ‘துரித உணவு’ என்ற கருத்தியலுக்கு மாற்று கருத்தியலை உருவாக்கி, அதன் வழியே, பாரம்பரிய உணவு வகைகளை மக்கள் உண்டு, நலமாக வாழும் வழிமுறைகளை சொல்லித்தரும் 'மெதுவான உணவு' என்ற அமைப்பை நிறுவிய கார்லோ பெத்ரீனி என்ற இத்தாலியரின் நேர்காணல், இந்த தொலைக்காட்சி நிகழ்வில் இடம்பெற்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.