2017-12-04 16:40:00

அன்பில் வெளிப்படும் விசுவாசம், தொட்டுணரக் கூடியதாக உள்ளது


டிச.,04,2017. ‘விசுவாசம் என்பது, அன்பில் தன்னை வெளிப்படுத்தும்போது, குறிப்பாக, துயருறும் சகோதர சகோதரர்களுக்காக ஆற்றப்படும் பணியில் தன்னை வெளிப்படுத்தும்போது, அது தொட்டுணரக் கூடியதாக உள்ளது’ என, இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

துன்பத்தில் இருப்போருக்கு உதவ வேண்டிய தேவை குறித்து திங்கள் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிறு தின டுவிட்டர் செய்தியில், மாற்றுத்திறனாளிகளை வரவேற்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தி, 'ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மையுடையவர், அவருக்கு இணையாக இன்னொன்றை இட்டு நிரப்ப இயலாதவர். ஆகவே, மாற்றுத் திறனாளிகள் அனைவரும் தாங்கள் வாழும் சமூகத்தில் எப்போதும் வரவேற்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்வோம்' என எழுதியுள்ளார்.

மேலும், இத்திங்களன்று தன்னை சந்தித்த, திருப்பீடத்திற்கான ஈக்குவதோர் நாட்டு புதிய தூதுவர்,  Jose Luis Alvarez Palacio அவர்களின் பதவி நியமன சான்றிதழை ஏற்று அங்கீகரித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.