சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ இந்தியா, இலங்கை

இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் ஆலயத்தின் 75வது ஆண்டு நிறைவு

இலங்கையின் வேவல புனித பிரான்சிஸ் சேவியர் ஆலயத்தின் 75வது ஆண்டு நிறைவு திருப்பலியில் கர்தினால் இரஞ்சித் - RV

06/12/2017 14:48

டிச.06,2017. கிறிஸ்தவர் ஒவ்வொருவரும் தங்கள் முழு விடுதலைக்காகவும், தங்கள் சகோதரர், சகோதரிகளின் விடுதலைக்காகவும் உழைக்க வேண்டும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் மறையுரை வழங்கினார்.

இலங்கையின் வேவலவில் (Wewala) கட்டப்பட்டிருந்த புனித பிரான்சிஸ் சேவியர் ஆலயத்தின் 75வது ஆண்டு நிறைவு திருப்பலியை தலைமையேற்று நடத்திய கர்தினால் இரஞ்சித் அவர்கள், அப்புனிதரைப்போன்று அயலவரின் முழு விடுதலைக்கு உழைக்க அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று குறிப்பிட்டார்.

400 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் கிறிஸ்தவ பிரசன்னம் உள்ளது என்பதை தன் மறையுரையில் குறிப்பிட்ட கர்தினால் இரஞ்சித் அவர்கள், புனித ஜோசப் வாஸ், புனித அன்னை தெரேசா ஆகியோரைக் குறித்தும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

06/12/2017 14:48