சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ நேர்காணல்

திருத்தந்தையின் பங்களாதேஷ் திருத்தூதுப்பயணம் பற்றி..

ரொஹிங்யா புலம்பெயர்ந்த பெண் ஒருவரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் - EPA

07/12/2017 13:42

டிச.07,2017. மியான்மார் நாட்டின் இரக்கைன் மாநிலத்தில் 2016ம் ஆண்டில் பிரச்சனைகள் தொடங்குவதற்குமுன்னர், ஏறத்தாழ பத்து இலட்சம் ரொஹிங்யா மக்கள் வாழ்ந்து வந்தனர். இம்மக்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். இந்துக்களும் உள்ளனர். மியான்மாரிலுள்ள 135 வகையான இனத்தவரில், ரொஹிங்யா இன மக்கள் சேர்க்கப்படவில்லை. குடியுரிமையும் இவர்களுக்கு மறுக்கப்பட்டு, நாடு இல்லாத மக்கள் எனக் கருதப்படுகின்றனர். இவர்கள், உலகிலே, மிக அதிகமாக நசுக்கப்படும் சிறுபான்மை மக்கள் என்றும் சொல்லப்படுகின்றது. கடந்த அக்டோபர் 22ம் தேதி ஐ.நா. வெளியிட்ட அறிக்கையின்படி இரக்கைன் பகுதியிலிருந்து ஆறு இலட்சத்திற்கு மேற்பட்ட ரொஹிங்யா மக்கள் பங்களாதேஷில் அடைக்கலம் தேடியுள்ளனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த நவம்பர் 30 முதல், டிசம்பர் 2ம் தேதி வரை, பங்களாதேஷில் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டவேளையில், ரொஹிங்யா புலம்பெயர்ந்தோரில் 16 பேரைச் சந்தித்தார். திருத்தந்தையின் இப்பயணம் மற்றும் இச்சந்திப்பு பற்றி வாட்சப் வழியாகப் பகிர்ந்து கொள்கிறார், இயேசு சபை அருள்பணி ஜெயராஜ் வேலுச்சாமி சே.ச.. கொல்கத்தா இயேசு சபை மாநிலத்தின் தலைவர் பணியை இவ்வாண்டில் நிறைவுசெய்து, கடந்த சில மாதங்களாக பங்களாதேஷில் ரொஹிங்யா புலம்பெயர்ந்தோர் மக்கள் மத்தியில் பணியாற்றி வருகிறார் அருள்பணி ஜெயராஜ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

07/12/2017 13:42