சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உலகம் \ அறிந்து கொள்வோம்

மனத்தளர்ச்சி நோயைக் கண்காணிக்க உலகளவில் நடவடிக்கை

டிமென்சியா நோயால் பாதிக்கப்பட்ட முதியவரைப் பாரமரிக்கும் தன்னார்வலர் - RV

08/12/2017 12:56

டிச.08,2017. முதுமை மற்றும் மனத்தளர்ச்சியால் ஏற்படும் Dementia நோயினால் உலகளவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும்வேளை, அந்நோய் குறித்த உலகளாவிய கண்காணிப்பு நடவடிக்கையை முதல்முறையாக, இவ்வியாழன்ன்று தொடங்கியுள்ளது, WHO எனும் உலக நலவாழ்வு நிறுவனம்.

உலக அளவில் வயது முதிர்ந்தவர்கள் மத்தியில் பரவி வரும் இந்நோயால் தற்போது 5 கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளவேளை, 2050ம் ஆண்டில், இவ்வெண்ணிக்கை 15 கோடியே 20 இலட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, WHO நிறுவன தலைமை இயக்குனர் Tedros Adhanom Ghebreyesus அவர்கள், செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

அல்சைமர் மறதி நோயையும் உள்ளடக்கிய Dementia நோயினால், ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ ஒரு கோடிப் பேர் பாதிக்கப்படுகின்றனர் என்றும், இவர்களில் அறுபது இலட்சம் பேர் வருவாய் குறைந்த மற்றும், நடுத்தர வருவாய் உள்ள நாடுகளைச் சார்ந்தவர்கள் என்றும் கூறினார், Ghebreyesus.

தற்போது 21 நாடுகளில் இந்த விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ள WHO நிறுவனம், 2018ம் ஆண்டின் இறுதிக்குள், 50 நாடுகளில் இந்நோய் பரவியிருக்கும் என்று எச்சரித்துள்ளது. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

08/12/2017 12:56