2017-12-08 13:03:00

பசுவைக் கொலை செய்பவருக்கு மரணதண்டனை அச்சுறுத்தலுக்கு...


டிச.08,2017. ஆடுமாடுளைக் கொலை செய்கின்ற அல்லது மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கின்ற மக்களைத் தூக்கிலிடுவோம் என்று இந்து தீவிரவாதக் குழு ஒன்று அச்சுறுத்தியிருப்பதற்கு எதிராக, தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார், இந்திய ஆயர் ஒருவர்.

விஷ்வ இந்து பரிஷத் குழுவின் அச்சுறுத்தல் பற்றி, யூக்கா செய்தியிடம் பேசிய, இந்திய ஆயர் பேரவையின் சிறுபான்மை இனக் குழுக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பணிக்குழுவின் தலைவரான ஆயர் வின்சென்ட் பார்வா அவர்கள், இந்த அமைப்பு, இந்தியாவில் வன்முறை மற்றும் சமயங்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றது என்று கூறினார்.

பசுக்கொலைக்கு எதிராக தேசிய அளவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், இச்சட்டத்தை மீறுகின்றவர்கள் கொலைசெய்யப்பட வேண்டும் என்றும், VHP அமைப்பு வலியுறுத்திவருவது பற்றிக் குறிப்பிட்ட ஆயர் பார்வா அவர்கள், மாட்டிறைச்சியைச் சாப்பிடுவதற்கு, தங்கள் மதங்களில் எந்தத் தடையையும் கொண்டிராத சிறுபான்மை மதத்தவரைக் குறிவைத்து, இவ்வாறு வலியுறுத்தப்படுகின்றது என்று கூறினார்.

இந்தியாவின் 29 மாநிலங்களில், பசுக்களும், எருதுகளும், காளை மாடுகளும் உள்ளன.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.