சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

கர்தினால்கள் குழுவின் 22வது கூட்டத்தின் அறிக்கை

கர்தினால்கள் குழுவின் 22வது கூட்டத்தில் பங்கேற்கும் திருத்தந்தை

14/12/2017 16:09

டிச.14,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கென உருவாக்கப்பட்டுள்ள கர்தினால்கள் குழுவின் 22வது கூட்டம், டிசம்பர் 11,12,13 ஆகிய மூன்று நாட்கள் வத்திக்கானில் நடைபெற்றதையடுத்து, இக்கூட்டங்களின் செயல்பாடுகளை, திருப்பீட செய்தித் தொடர்பாளர் Greg Burke அவர்கள், இப்புதன் மதியம் செய்தியாளர்களிடம் கூறினார்.

திருப்பீடத்தின் பல்வேறு துறைகளைக் குறித்த மீள்பார்வை நடைபெற்ற அதே நேரம், அருள்பாணியாளர்கள் பேராயம், நற்செய்தி அறிவிப்பு பணி பேராயம் ஆகியவற்றைக் குறித்து ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன என்று Burke அவர்கள் தெரிவித்தார்.

இம்மூன்று நாட்களும் காலை மூன்று மணி நேரமும், பிற்பகல் மூன்று மணி நேரமும் நடைபெற்ற அத்தனைக் கூட்டங்களிலும் கலந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் வழக்கமான வார நிகழ்வான, மறைக்கல்வி உரை நடைபெற்றதையடுத்து, புதன் காலை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று Burke அவர்கள் தெரிவித்தார்.

திருப்பீடத்தின் அனைத்து துறைகளும், பணியாற்றும் மனப்பான்மையை வளர்ப்பதற்குத் தேவையான கூறுகள், இந்த அமர்வுகளில் பேசப்பட்டதென Burke அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

C9 என்றழைக்கப்படும் இந்த கர்தினால்களின் அடுத்த கூட்டம், 2018ம் ஆண்டு, பிப்ரவரி 26, 27, 28 ஆகிய நாள்களில் நடைபெறும் என்று, திருப்பீட செய்தித்தொடர்பாளர் Burke அவர்கள் அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

14/12/2017 16:09