2017-12-14 15:35:00

ஒகிப் புயல் பாதிப்புக்களில் தலத்திருஅவையின் நிலைப்பாடு


டிச.15,2017. கடந்த நவம்பர் 30ம் தேதி கன்னியா குமரி மாவட்டத்தை உலுக்கிய ஒகிப் பேரிடர் ஏற்படுத்திய பாதிப்புக்களின் சுவடுகள் இன்னும் மறையவில்லை. முதற்கட்ட ஆய்வில், 3,623 ஹெக்டேர் பரப்பிற்கும் அதிகமாக தோட்டக்கலைப் பயிர்கள், குறிப்பாக, வாழை ஏறத்தாழ 1,900 ஹெக்டேர் பரப்பிலும், இரப்பர் மரங்கள் ஏறத்தாழ 1,400 ஹெக்டேர் பரப்பிலும் சேதம் அடைந்துள்ளன. இரப்பர் தொழிலை நம்பி வாழ்ந்த ஏறத்தாழ பத்தாயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இப்புயலில், நிறைய மீனவர்கள் இறந்துள்ளனர் மற்றும், கடலில் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில், திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டத்தின் தூத்தூர் பங்குத் தந்தை அருள்பணி பெபின்சன் அவர்களுக்கு, வாட்சப்பில் நாம் அனுப்பிய கேள்விகளுக்குப் பதில் அனுப்பியுள்ளார். தூத்தூர் மறைவட்டம் ஒகிப்புயலில் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.