சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வத்திக்கான் \ நிகழ்வுகள்

திருத்தந்தைக்கு மெக்சிகோ அரசு வாகனப் பரிசு

திருத்தந்தைக்கு மெக்சிகோ அரசு வழங்கிய திறந்த வெள்ளைநிற வாகனம் - RV

15/12/2017 14:36

டிச.15,2017. “நம்மை நினைப்பதற்கு வேறு யாரும் இல்லையென்றாலும்கூட, இயேசு எப்பொழுதும் நம் பக்கம் இருக்கின்றார்” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் செய்தியாக, வெளியிட்டார்

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2016ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி முதல், 18ம் தேதி வரை மெக்சிகோவில், திருத்தூதுப் பயணத்திற்குப் பயன்படுத்திய திறந்த வெள்ளைநிற வாகனம், அவருக்குப் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அந்த வாகனத்தை, மெக்சிகோ அரசு, திருத்தந்தைக்குப் பரிசாக வழங்கியுள்ளது.

மெக்சிகோவிலிருந்து, வத்திக்கானுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த வாகனம், மெக்சிகோ மக்களின் நன்கொடையாக, டிசம்பர் 13, இப்புதனன்று திருத்தந்தையிடம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

15/12/2017 14:36